×
Saravana Stores

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.61.50 காசுகள் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வதால் ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் வருவாயை பெருக்கும்...