×
Saravana Stores

8 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் அலெப்போவில் நுழைந்த கிளர்ச்சி படைகள்: ராணுவம் பதிலடி

பெய்ரூட்: சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் அலெப்போ நகருக்குள் நுழைந்த கிளர்ச்சிப் படைக்கு எதிராக சிரிய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் கடந்த 2011ல் அதிபர் பசிர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான போராட்டம் உள்நாட்டு போராக விரிவடைந்தது. சிரிய ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சிப் படைகள் போரிட்டு வருகின்றன. சிரிய அரசு ராணுவத்திற்கு ரஷ்யா, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவாக சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில், 2016க்குப் பிறகு முதல் முறையாக கிளர்ச்சிப் படையினர் சிரியாவின் பெரிய நகரங்களில் அலெப்போவிற்குள் நுழைந்துள்ளனர். அரசுப் படையினரின் பாதுகாப்புகளை நேற்று முன்தினம் தகர்த்தெறிந்த கிளர்ச்சிப் படை வீரர்கள் அலெப்போ எல்லை கிராமங்களில் நுழைந்துள்ளனர். இதன் காரணமாக அலெப்போவில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சிப் படையை விரட்ட சிரியா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அலெப்போ, இட்லிப் மாகாணங்களில் கிளர்ச்சிப் படை முன்னேற துருக்கி உதவி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அலெப்போவின் வடமேற்கில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 200 கிளர்ச்சிப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவில் படைகளை ஒருங்கிணைக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஓலெக் கூறி உள்ளார்.

The post 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் அலெப்போவில் நுழைந்த கிளர்ச்சி படைகள்: ராணுவம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Aleppo, Syria ,BEIRUT ,SYRIAN ,CITY ,ALEPPO ,Syria ,President ,Bashir Assad ,Dinakaran ,
× RELATED ஹிஸ்புல்லா முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 11 பேர் பலி