டாக்கா: வங்கதேசத்தில் இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சின்மோய் கிருஷ்ணா தாஸ் தற்போது சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவராக உள்ளார். கடந்த அக்டோபர் 25ம் தேதி டாக்காவில் இந்து மத ஊர்வலம் நடந்தது. அப்போது வங்கதேச கொடியை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் சின்மோய் கிருஷ்ணா தாஸ் மற்றும் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சின்மோய் கிருஷ்ணா தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிட்டகாங் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது சைபுல் இஸ்லாம் அலி என்ற வழக்கறிஞர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சைபுல் இஸ்லாம் அலி கொலை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வங்கதேச வக்கீல் கொலையில் 9 பேர் கைது appeared first on Dinakaran.