கீவ்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு வருவதற்கான வேலைகளை பிற நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யாவுடன் உடனான போர்நிறுத்தத்திற்கு தயாராக உள்ளோம். இதற்காக, நேட்டோ அமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை நேட்டோவின் கீழ் எடுத்துக் கொண்டால், நாங்கள் ரஷ்யாவுடன் போர்நிறுத்தம் குறித்து உடன்பாட்டை எட்ட முடியும். உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்யா பின்வாங்காவிட்டாலும், உக்ரைனின் மீதமுள்ள பகுதிக்கு நேட்டோ பாதுகாப்பை உறுதிசெய்தால் போர்நிறுத்த உடன்பாட்டில் ஒத்துழைக்கிறோம்’ என்று கூறினார்.
The post ரஷ்யா உடனான போர் நிறுத்தத்திற்கு தயார்: உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.