- மாமல்லபுரம் புயல்
- ஃபெங்கெல்
- வானிலை மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- புயல் ஃபெங்கெல்
- வங்காள கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
சென்னை: சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு 80 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலின் வேகம் தற்போது 7 கி.மீ. ஆக குறைந்தது. காலை 8 மணி அளவில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஃபெஞ்சல், தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. கரையை நெருங்கும் போது புயல் நகரும் வேகம் மேலும் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.
The post மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்: வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.