×
Saravana Stores

பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

*தூத்துக்குடி மகிளா கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி : பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (எ) காத்திக்குமார்(32). ஆட்டோ டிரைவர். முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சி இவரை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மாதவராமானுஜம் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் (எ) காத்திக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் எல்லம்மாள் ஆஜரானார்.

The post பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Magla Court ,Thoothukudi ,Supaiah ,Karthik (A) Kathikumar ,Thoothukudi Muthaiapuram Thopu Street ,
× RELATED தூத்துக்குடி சங்கரப்பேரியில்...