பந்தலூர், நவ.30: பந்தலூர் அருகே பிதர்காடு பஜார் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிதர்காடு பஜார் பகுதியில் புதிய மின்மாற்றி மின்வாரியத்தால் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வில் தேவர்சோலை மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் மின் பணியாளர்கள் சந்திரன், ராஜீ உள்ளிட்டோர் இருந்தனர்.
The post பிதர்காடு பஜார் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு appeared first on Dinakaran.