- ஜெயங்கொண்டா
- ஜெயங்கொண்டம்
- அரியலூர் மாவட்டம்
- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத் துறை
- மாண்புமிகு நெடுஞ்சாலைகள்
- சிறு துறைமுகங்கள் துறை
- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத் துறை
- தின மலர்
ஜெயங்கொண்டம், நவ. 30: அரியலூர் மாவட்டம் முழுவதும் மழைக்காலத்தை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவின் படியும், நெடுஞ்சாலை துறை தலைமைப் பொறியாளர் க(ம)ப, சென்னை வழிகாட்டுதலின் படியும், அரியலூர் நெடுஞ்சாலை துறை ,
க(ம)ப, கோட்டம், ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை க(ம)ப, உட்கோட்டக் கட்டுபாட்டிலுள்ள உட்கோட்டை தழுதாழைமேடு சாலையின் ஓரங்களில் (தழுதாழைமேடு) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கா வண்ணம் சாலைப்பணியாளர்கள் மூலம் சாலையின் புருவங்கள் சீர் செய்யும் பணியும், வடிகால் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இந்த பணி ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை க(ம)ப, உட்கோட்டப் பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.
The post ஜெயங்கொண்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.