பெரம்பலூர்,நவ.30: அம்மாபாளையம் கிராமத்தில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்காக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அறிவித்த ‘பால் விவாஹ் முக்த் பாரத்’ பிரச்சாரத்தின் தொடர்ச்சி யாக, நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்கும் படி அறிவுறுத்தினார்.
அதன்படி, \”குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா\” என்ற நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கியுள்ளது.புதுடெல்லியில் மத்திய அரசு நாடு முழுவதும் ‘பால் விவாஹ் முக்த் பாரத்’ (குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா) பிரச்சாரத்தைத் தொடங்கும், அதே வேளையில், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாது காப்புத் திட்டம், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மீரா பவுன் டேசன் ஆகியவை இணைந்து குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியையும் விழிப்புணர்வுப் பேரணியையும் நடத்தியது.
இதனையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மது விலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன் தலைமை வகித்தார். அம்மா பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சை பிள்ளை வரவேற்றார்.பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அம்மாப் பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம பொது மக்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு, கைகளில் மெழுகு வர்த்திகளை ஏந்திக் கொண்டு, அம்மாபாளையம் கிராமத்தை ‘குழந்தைத் திருமணம் இல்லாத கிராமமாக மாற்ற’ உறுதி ஏற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலகு கல்பனா, சகி ஒருங்கிணைந்த மையம் மேகலா, மீரா பவுண்டேசன் நிறுவனர் செல்வராணி,குழந்தை திருமண தடுப்பு களப்பணியாளர்கள் மணிமாறன், அனுரேகா, பிரியா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை பாது காப்பு அவசியத்தை எடுத் துரைத்தனர். முடிவில் மீரா பவுண்டேஷன் இயக்குனர் ராஜா முகமது நன்றி தெரிவித்தார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராம மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
The post அம்மாபாளையத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.