×

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா கொள்ளுப்பேரன் மரணம்

ராஞ்சி: ஜார்க்கண்டை சேர்ந்த பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரரான பிர்சாமுண்டாவின் கொள்ளுப்பேரன் மங்கள் முண்டா உயிரிழந்தார். கடந்த 25ம் தேதி பயணிகள் வாகனத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்த மங்கள் முண்டாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு மங்கள் முண்டா உயிரிழந்தார். மங்கள் முண்டா மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு பழங்குடியின சமூகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா கொள்ளுப்பேரன் மரணம் appeared first on Dinakaran.

Tags : Birsa Munda ,Ranchi ,Mangal Munda ,Jharkhand ,Birchamunda ,
× RELATED அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி...