இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது வருகிற 6ம் தேதி அன்று மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணைய தளத்தில் உள்ள \”ஆன்சர் கீ சேலன்ச்\” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை வரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான தாள் 1 மற்றும்- 2 ஆகியவற்றிற்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.com) வெளியிடப்பட்டுள்ளன. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
The post ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு கீ ஆன்சர் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.