இதை ரத்து செய்வதற்கு மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சொத்து வரி உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை. ஆட்சியில் இருக்கும்வரை சொத்துவரியை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டோம். சொத்துவரியை உயர்த்தும் நடவடிக்கை என்பது வேதனைக்குரியது. சொத்துவரி உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசின் எந்த அக்ரிமெண்டிலும் நாங்கள் கையெழுத்து போடவில்லை.
டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக நாங்கள்தான் உருவாக்கினோம் என்பதை ஜெயக்குமார் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியுள்ளார். ஒன்றிய பட்டியலில் இருந்த வேளாண் துறையை நாங்கள்தான் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தோம். அதிமுக களஆய்வு கூட்டங்களில் கலவரம் எங்கே நடந்தது? அதாவது அதிமுக என்பது ஆரோக்கியமான கட்சி. சுதந்திரமாக செயல்படும் கட்சி. யார் உழைத்தாலும் அவர்களுக்கு இடம் உண்டு. அவர்களுக்கு வாய்ப்புகளும் வழங்கப்படும்.
இந்த அடிப்படையில்தான் நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். எனவே எங்களது களஆய்வு கூட்டங்களில் பரிமாறப்படும் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மோதல் என்று சொல்ல முடியாது. 2026ல் எப்படியாவது எங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். இதற்காகவே நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
The post அதிமுக கள ஆய்வுகளில் நடப்பது மோதல் அல்ல, கருத்து பரிமாற்றம்: சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.