×
Saravana Stores

மாணவிகளுக்கு கணினி பயிற்சி

சிவகங்கை, நவ. 30: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவிகளுக்கு, தனியார் மையத்தில் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவ, மாணவிகளுக்கு உள்ளுறை பயிற்சி வழங்க மாநில அரசு ஆணையிட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு, சிவகங்கையில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 10 நாள் பயிற்சி தொடங்கியது. இதில் எம்.எஸ்.வேர்டு, எக்ஸ்.எல், பெயிண்டிங் உள்ளிட்ட உள்ளுறை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலாளர் போஸ் மற்றும் பயிற்சியாளர்கள் மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கினர். கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

The post மாணவிகளுக்கு கணினி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Government Girls Higher Secondary School ,Tamil Nadu ,
× RELATED சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி