×
Saravana Stores

சாயர்புரம் கல்லூரியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏரல், நவ. 30: சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். முதல்வர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்கர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் விஜயலட்சுமி, ஜேஸ்பர்லின், செல்வரதி, ஆனந்தி, ஜாக்சன், டென்னிசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டென்னிசன் செய்திருந்தார்.

The post சாயர்புரம் கல்லூரியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sairapuram College ,Eral ,Sairapuram Pope College of Engineering ,Rajesh Ravichander ,Chief Minister ,Zabind ,Shankar ,Sayarapuram College ,
× RELATED ஏரல் அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்த பெண் குத்திக் கொலை