- நயம்புத்தூர்
- ஓட்டப்பிடாரம்
- நயம்புத்தூர்
- பாலகிருஷ்ணன்
- முனியசுவாமி
- வாழவல்லான்
- வைகுந்தத்தின்
- தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம், நவ. 30: புதியம்புத்தூர் அருகே அதிகாலையில் ரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதமானது. வைகுண்டம் அருகே வாழவல்லான் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முனியசாமி (26). இவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து பர்னிச்சர் பொருட்களை ஏற்றுவதற்காக சரக்கு வாகனத்தை புதியம்புத்தூருக்கு ஓட்டிச் சென்றார். சில்லாநத்தம் அருகே வரும்போது சரக்கு வாகனத்தின் பின்பகுதியில் கரும்புகையாக வந்துள்ளது. டிரைவர் கீழே இறங்கி பார்த்தபோது சரக்கு வாகனத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் சரக்கு வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது.
The post புதியம்புத்தூர் அருகே சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.