×
Saravana Stores

செங்கல்பட்டில் கனமழை

செங்கல்பட்டு, நவ.30: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது‌‌. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று காலை முதலே வானம் கரு மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மேலும், அரை மணி நேரத்திற்கு மேலாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதில், குறிப்பாக செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

The post செங்கல்பட்டில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai Meteorological Center ,Bay of Bengal ,
× RELATED செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய கனமழை