×
Saravana Stores

ஆரி வடிவமைப்பு பயிற்சி

சேலம், நவ.30: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெண்களுக்கு ஆரியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி சேலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆரி வேலையை தொடங்கும் முன் ஊசியை தேர்ந்தெடுக்கும் முறை, நூல் மற்றும் ஆரியை பயன்படுத்தி மணிகள், முத்துகள் கொண்டு செய்யும் முறை, வெல்வெட், பருத்தி, பட்டு துணியில் பூக்கள், இலை, கொடிகள், மரங்கள், பறவைகள், மாம்பழ வடிவத்தில் எம்பிராய்டரி செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்றுநர் நசிம்பானு, ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுபிரியா, கல்லூரி முதல்வர் ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட இடிஐஐ திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அப்துல்காதர் செய்திருந்தார்.

The post ஆரி வடிவமைப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ari Design Practice ,Salem ,Tamil Nadu Entrepreneurship Development and Innovation Institute ,Tamil Nadu Women Development Institute ,Aari ,Ari ,Dinakaran ,
× RELATED சேலம் உருக்காலை தேர்தலில் வெற்றி: மு.சண்முகம் நன்றி