×
Saravana Stores

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ராஜ்நாத் சிங்குக்கு கனிமொழி எம்பி நன்றி

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடிதம் வழங்கியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்த ராஜ்நாத்சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ராஜ்நாத் சிங்குக்கு கனிமொழி எம்பி நன்றி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Rajnath Singh ,Daruwaikulam ,Thoothukudi district ,Chennai ,DMK ,Deputy General Secretary ,Tharuvaikulam ,Lakshadweep ,Union Defense Minister ,Rajnath ,
× RELATED போர்பந்தர் அருகே கடலில்...