ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனை: தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

சென்னை: சபரிமலை பக்தர்கள், ரயிலில் கற்பூரம் ஏற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தீ விபத்துகள். ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் திறந்த சுடர்/நெருப்பை ஏற்றுவது ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

இதில் ரூ.1000 அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படும். மற்றும் ஏற்படும் இழப்புகள்/ காயங்கள்/சேதங்களுக்கான பொறுப்பு. பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதில் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் உதவி அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகளுக்கு, பயணிகள் கட்டணமில்லா ரயில்வே உதவி எண் 139ஐ அணுகலாம் அல்லது பணியில் இருக்கும் எந்த ரயில்வே ஊழியர்களையும் அணுகலாம். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் உறுதிபூண்டுள்ளது. ரயில்வேயுடன் கைகோர்த்து, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கற்பூரம் ஏற்றி எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

The post ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனை: தெற்கு ரயில்வே அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: