அதில் முதல்வர் பேசும் போது: ‘இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. போலீஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல லட்சம் பேர்களில் இருந்து, நீங்கள் 3,359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் ஒரு அறிவுரை தர விரும்புகிறேன். வேலையை கவனிக்கும் அதே நேரத்தில், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்; குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுங்கள்.
நவீன காலகட்டத்தில் ஏற்றதுபோல, தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்’. என்று பேசினார். முதல்வரின் இந்த பேச்சு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை மிக பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் முதல்வர் பேச்சு பதிவிட்ட 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அவர்கள் முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
The post சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் போலீசார் குறித்து முதல்வர் பேசிய வீடியோவை 1 லட்சம் பேர் பார்வை appeared first on Dinakaran.