- ஆதிமுகா பிரமுக்கர்
- எதிர்ப்பு-
- லஞ்ச் திணைக்களம்
- சேலம்
- Mamool
- லஞ்சம் மற்றும் ஊழல் திணைக்களம்
- பூபாலன்
- நோவல்பட்டி
- மேத்தூர், சேலம் மாவட்டம்
- மாமூல் ஹன்ட்
- தின மலர்
சேலம்: மாமூல் வேட்டையின் மூலம் மகன் பெயரில் அதிமுக பிரமுகர் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நாவல்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (36). இவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சென்னகிருஷ்ணன் சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் பூபாலன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பூபாலன், கடந்த 2017ம் ஆண்டு அரசு பணியில் உதவியாளராக (ஓஏ) சேர்ந்தார். அவரது சம்பளம் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது. ஆனால் 2022ம் ஆண்டு வரை அவரது சொத்துக்களை கணக்கிட்டபோது வருமானத்திற்கு அதிகமாக 1,188 சதவீதம் உயர்ந்தது தெரியவந்தது. இதன்படி அவர் ரூ.1 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்திற்கு அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அவர் வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் சம்பளத்தை கணக்கிட்டால் ரூ.9 லட்சத்து 22 ஆயிரம்தான் வருகிறது. அவருக்கு மேட்டூர், கருப்பூர் ஆகிய இடங்களில் வீடுகளும், சொத்துகளும் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் பூபாலன் எப்படி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பதில் புது தகவலும் வெளிவந்துள்ளது. அவரது தந்தையான சென்னகிருஷ்ணன் சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டர்தான். ஆனால் அவருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டல அண்ணா போக்குவரத்துக்கழக செயலாளராக பொறுப்பு கிடைத்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பொறுப்பில் இருந்ததால் மாமூல் அதிகளவு கிடைத்ததாக கூறப்படுகிறது. கிளை மேலாளர்கள், இன்ஜினியர்கள், கண்டக்டர்கள், டிரைவர்கள் இடமாறுதல், போக்குவரத்து ரூட்டுக்கு பணம் என அதிகளவில் குவிந்துள்ளது.
அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகாரின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி சென்னகிருஷ்ணன் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தனர். அந்த விசாரணையின்போது மகன் பூபாலன் பெயரிலும் ஏராளமான வீடுகளும், சொத்துகளும் அதிகளவில் சென்னகிருஷ்ணன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபாலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னகிருஷ்ணன் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயார் நிலையில் இருந்து வருகிறது. அவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் வழக்கு இருப்பதால் பணப்பலன்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தை செய்த தவறின் காரணமாக மகனும் தற்போது லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாமூல் வேட்டை மூலம் கோடீஸ்வரரான அதிமுக பிரமுகர் 6 ஆண்டில் சம்பளமே ரூ.9 லட்சம்தான்… ஆனா…கோடிக்கணக்கில் சொத்து குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்து விசாரணை appeared first on Dinakaran.