திருவிக நகரில் முகநூல் மூலம் பழகி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு 8 சவரன் நகைகளுடன் மாயமான ஆசாமி


பெரம்பூர்: சென்னை திருவிக நகர் பகுதியை சேர்ந்த மாலதி (54, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூலில் சிவா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் செல்போனில் பேசி பழக்கத்தை வளர்த்துகொண்டனர். இந்நிலையில் மாலதியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு நேற்று முன்தினம் காலை மாலதி வீட்டிற்கு சிவா வந்துள்ளார். அதன்பிறகு இருவரும் உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது. பிறகு மாலதி குளிப்பதற்காக நகைகளை கழட்டி மேஜை மீது வைத்துவிட்டு சென்றுள்ளார்.

குளித்துவிட்டு வந்தபோது மேஜை மீது வைத்திருந்த நான்கரை சவரன் செயின் மற்றும் ஒன்றரை சவரன் மதிப்புள்ள மற்றொரு செயின், ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் மதிப்புள்ள மோதிரம் என 8 சவரன் நகைகள் காணாமல் போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஹாலில் அமர்ந்திருந்த சிவாவும் காணவில்லை. அசிங்கப்பட்டு யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை திருவிக நகர் காவல்நிலையத்தில் மாலதி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவின் முகநூல் கணக்குகளை ஆராய்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

The post திருவிக நகரில் முகநூல் மூலம் பழகி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு 8 சவரன் நகைகளுடன் மாயமான ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: