- வங்காள விரிகுடா
- காரைக்கால் - மாமல்லபுரம்
- சென்னை
- இந்திய வானியல் துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஃபெஞ்சல்
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்று இன்று காலை கணிக்கப்பட்ட நிலையில், புயலாக மாறும் என்று மீண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதனை உறுதி செய்யும் வகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால 2வது புயலாகவும் உருவாகி உள்ளது ஃபெஞ்சல். ஏற்கெனவே வங்கக்கடலில் ரெமல், டானா ஆகிய புயல்கள் உருவாகி இருந்தன. நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடையிடையே 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
The post வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்… நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது!! appeared first on Dinakaran.