×
Saravana Stores

ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு: ஒன்றிய அரசு தகவல்

 

டெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகி உள்ளதாக ஒன்றிய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதில் அளித்துள்ளார்:

‘2017-18 முதல் ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் மூலம் வருடாந்திர தொழிலாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பு ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. அந்தத் தரவுகளின்படி 2017-18 ஆண்டில் 22% ஆக இருந்த வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 2023-24ல் 40.3% ஆகியுள்ளது. கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை 2017-18ல் 22.3% ஆக இருந்தது. அது 2023-24ல் 41.7% ஆகியுள்ளது. 2017-18ல் 5.6% ஆக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2023-24ல் 3.2% ஆக குறைந்துள்ளது. 2017-18ல் 34.5 ஆக இருந்த முதுகலை மேல்படிப்பு முடித்த பெண்களின் சதவீதம் 2023-24ல் 39.6 சதவீதம் ஆகியுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க ஒன்றிய அரசு அறிவித்துள்ள திட்டங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான விவரத்தையும் அமைச்சா் தனது பதிலில் விவரித்துள்ளாா்.வேலைக்கு செல்லும் பெண்கள் தொடா்பான நிகழாண்டு சதவீத பட்டியலில் சிக்கிம் 66.8, மேகாலயா 65.9, அருணாசல பிரதேசம் 62.4 ஹிமாசல பிரதேசம் 62.3 ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிகம் போ் வேலைக்கு செல்பவா்களாக இருப்பது அமைச்சரின் பதில் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இந்த சதவீதம் 2021-22ல் 39.1, 2022-23 ல் 38.6, 2023-24ல் 41.5 ஆக பதிவாகியுள்ளது.

 

The post ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Govt. Delhi ,Union Labor and Employment ,Minister ,Mansukh Mandaviya ,India ,Rajya Sabha ,DMK ,Kanimozhi NVN ,Union government ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினத்தில் தென் கடற்கரை...