இதுபோல் தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.12667) வரும் டிசம்பர் 19ம் தேதி முதல், வரும் பிப்ரவரி 9ம் தேதி வரை இரவு 8.23 மணிக்கு மேல்மருவத்தூரில் இரு நிமிடங்கள் நின்று செல்லும்.
ஹஸ்ரத் – நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (எண்.12642) வரும் 14ம் தேதி முதல், பிப்ரவரி 8ம் தேதி வரை மாலை 5.43 மணிக்கு மேல்மருவத்தூரில் இரு நிமிடங்கள் நின்று செல்ல உள்ளது. மேலும் தாம்பரம்- செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.20683) வரும் 15ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை மேல்மருவத்தூரில் இரு நிமிடங்கள் நின்று செல்ல உள்ளது. செங்கோட்டை- சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ்(எண்.12662) வரும் 14ம் தேதி முதல், பிப்ரவரி 11ம் தேதி வரை அதிகாலை 3.43 மணிக்கு மேல்மருவத்தூரில் இரு நிமிடங்கள் நின்று செல்லும்.
இதுபோல் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரசும்(எண்.20692) வரும் 14ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை காலை 4.18 மணிக்கு இரு நிமிடங்கள் நின்று செல்லும். நாகர்கோவில்- சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரசும் (எண்.12668) வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரையும் மேல் மருவத்தூரில் இரு நிமிடங்கள் நின்று செல்ல உள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post தை பூசத்தை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்கள் சில மேல்மருவத்தூரில் நின்று செல்லும் appeared first on Dinakaran.