- திருச்சி
- திருவெரும்பூர்
- இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம்
- வஜவனந்தன்கோட்டை
- திருச்சி திருவெறும்பூர்
- சென்னை
- 14
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- காரைக்கால்
- கரூர்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகை
- சிவகங்கை…
திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு உள்ளது. சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் இங்கு கொண்டு வரப்பட்டு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை உட்பட 14 மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ந்நிலையில், ஐஓசிஎல் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து வண்டிகளுக்கும் லோடு ஏற்ற அனுமதிக்க வேண்டும். காலையில் லோடு ஏற்றுவதற்கு டீலர் வண்டிகளை அனுமதிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளை இல்லாமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். லோடு பில்லிங் ஸ்லிப்பில் உள்ள நேர கட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும்.
தமிழ் மொழி தெரியாமல் கிடங்கில் வேலை செய்பவர்களால் லாரி டிரைவர், கிளீனர்களுக்கு அவமரியாதை ஏற்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரி டிரைவர், கிளீனர்கள் சுமார் 500 பேர் நேற்று திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ந்தியன் ஆயில் கார்ப்பரேசன் கிடங்கு அதிகாரிகள் லாரி டிரைவர், கிளீனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இன்று 2வது நாளாக லாரி டிரைவர், கிளீனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 14 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post திருச்சியில் 2வது நாளாக டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.