திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையும் செலுத்துகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 56,952 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,714 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில், ₹3.84 கோடி காணிக்கை செலுத்தினர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில், 25 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 13 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post 13 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.