டெல்லி: மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறுகையில், சீரிய தொலைநோக்கு பார்வை கொண்ட, ஒன்றிய அரசு, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 3 ஆயிரத்து 295 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளர்ச்சித் திட்டத்தில் தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்காவின் மேம்பாட்டிற்கு ஒன்றிய அரசு 99 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், உதகையில் உள்ள தேவாலா மலர்கள் பூங்காவின் மேம்பாட்டிற்கு ஒன்றிய அரசு 70 கோடியே 23 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார். நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
The post மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது: எல்.முருகன் appeared first on Dinakaran.