* குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதிகள் அவசியம்
* அதிகாரிகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி- மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம்தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறையின் சார்பில் நேற்று (28ம் தேதி) மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சக்கர நாற்காலி போட்டி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டம் போட்டிகளை மாவட்டக் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் செவித் திறன் பாதிக்கப்பட்டோர் களுக்கு 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப் பந்தயம்-100 மீ மற்றும் நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வயது வரை ஓட்டப்பந்தயம்-200மீ மற்றும் குண்டு எறிதல், 17 வயதிற்குமேற்பட்டோருக்கு-ஓட்டப்பந்தயம்-400மீ தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும், பார்வைத்திறன் பாதிக்கப் பட்டோர்களுக்கு 12 வயது முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் (ஆண்கள்),
ஓட்டப்பந்தயம் 100மீ(ஆண்கள்), 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் (பெண்கள்), ஓட்டப்பந்தயம் 50மீ;(பெண்கள்), 15 வயது முதல் 17 வயது வரை குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் 100மீ, 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் வட்டத் தட்டு எறிதல் (ஆண்கள்), ஓட்டப்பந்தயம்-200மீ (ஆண்கள்), 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் வட்டத் தட்டு எறிதல் (பெண்கள்), ஓட்டப்பந்தயம்-100மீ (பெண்கள்) 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) குண்டு எறிதல், கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் இரு பாலாருக்கும் ஓட்டப் பந்தயம் 100மீ ஆகிய போட்டிகளும்,
கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு (நடக்கும் சக்தியற்றவர்கள்) போட்டிகள் (உதவி உபகரணங்களின் உதவியுடன்) – இரு பாலருக்கும் பொதுவாக இப்போட்டிகள் 12 வயது முதல் 14 வயது வரை காலிப்பர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்கள் நடைப்போட்டி-50மீ, 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கர வண்டி ஒட்டப்போட்டி 150மீ(ஆண்கள்) 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கரவண்டி ஓட்டப்போட்டி 100மீ (பெண்கள்),17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலி, ஓட்டப் போட்டி-75மீ ஆகிய போட்டிகளும் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவிலான இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் காப்பாளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு உலக மாற்றுத்திறனாளி தினத் தன்று பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 100 மீட்டர் நடை, சக்கர நாற்காலி, மூன்று சக்கர ஓட்டம் என மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி முதல் 3 இடங்களை வென்றோருக்கு பரிசு, சான்று appeared first on Dinakaran.