- பதுக்கோட்டை
- மரக்கவலாசி
- பேராவூரணி
- தஞ்சாவூர் மாவட்டம்
- படுகோட் காடு
- ஒரத்தநாடு
- பட்டுக்கோட்டை வனத்துறை
- பதுக்கோட்
*ரூ.22 ஆயிரம் அபராதம் விதிப்பு
பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை கிராமத்திலும், ஒரத்தநாடு பகுதிகளிலும் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகளை உயிருடன் வலை வைத்து பிடிப்பதாக பட்டுக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், மரக்காவலசை கிராமத்திற்கு பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் சென்று அந்த பகுதியில் கொக்கு மற்றும் மடையான்களை உயிருடன் வலை வைத்து பிடித்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
விசாரணையில், அவர்கள் மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (55), தம்பிதுரை (43) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 கொக்கு மற்றும் 7 மடையான்களை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து தஞ்சை மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு ) கீர்த்திகா உத்தரவின்படி, 5 கொக்கு மற்றும் 7 மடையான் பறவைகளை வெண்டாக்கோட்டை ஏரியில் நல்ல நிலையில் வனத்துறையினர் பறக்கவிட்டனர்.
மேலும் இது குறித்து வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு பாலாஜி, தம்பிதுரை ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல ஒரத்தநாடு அருகில் உள்ள வயல்வெளிகளில் கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகளை உயிருடன் வலை வைத்து ஒரத்தநாடு அண்ணாநகரை சேர்ந்த சாரதி ( 21), வீரா (25 ) ஆகியோர் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 10 கொக்கு மற்றும் 7 மடையான் பறவைகளை வெண்டாக்கோட்டை ஏரியில் நல்ல நிலையில் வனத்துறையினர்.
The post பட்டுக்கோட்டை அருகே வலை வைத்து 15 கொக்கு, 14 மடையான் பிடித்த 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.