இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தெய்வசிகாமணியின் தோட்டத்து சாலைக்கு வந்ததாகவும் தெய்வசிகாமணியை தோட்டத்தில் வைத்து வெட்டியதாகவும், அதை தடுக்கச் சென்ற அலமாத்தாள் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவரத் தொழிலாளர் ஒருவர் மூன்று பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவிநாசி பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் தடையவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் நகை பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கூறியதாவது; பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 8 சவரன் நகை திருடுபோனதாக தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து பகுதியிலும் வாகன சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
The post பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு: மாநகர காவல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.