திருவனந்தபுரம் : மிக குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய சமூக நல ஓய்வூதிய பலன்களை உதவி பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 1000திற்கும் மேற்பட்டோர் பெற்று பயன் அடைந்து வந்தது கேரளாவில் ஆதாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கு மாதம் தோறும் ரூ.1,600 சமூக நல ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமானம் வரி செலுத்தாதவர்களுக்கும் ஒன்றிய மாநில, அரசுகளிடம் இருந்து ஊதியம், ஓய்வூதியம் பெறாதவர்களுக்கும் சமூக நல ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சொத்து, வாகனம் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட அளவு கோள்களும் ஆராயப்படுகிறது. பயனாளிகளுக்கு இந்த தொகையை விநியோகிக்க சேவனா என்ற மின் பொருளை அரசு வடிவமைத்துள்ளது. மேலும் தகுதியான பயனாளர்களுக்கு ஓய்வூதியம் சென்று அடைவதை உறுதிப்படுத்த அரசு பணியாளர்களின் பணி ஊதியம் உள்ளிட்ட தரவுகளை ஆதார் எண் மூலம் நிர்வகிக்கும் ஸ்பார்க் என்ற தரவு சேகரிப்பு களஞ்சியத்துடன் சேவனா மின் பொருளை நிதியமைச்சகம் இணைத்துள்ளது.
இந்த நிலையில் வருடாந்திர சரிபார்ப்பு நடவடிக்கையில், ஊதியம் பெறக்கூடிய உதவி பேராசிரியர்கள், எழுத்தர் போன்ற அரசு ஊழியர்கள் ரூ.1,458 பேர் முறைகேடாக ஓய்வூதியத்தை பெற்று வந்தது. ஆதார் எண்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலர் ஓராண்டிற்கு மேலாக பெற்று கொண்டு இருப்பதும் இதுவரை எவ்வளவு தொகை சென்று அடைந்துள்ளது என்பதையும் நிதியமைச்சகம் கண்டறிந்து வந்துள்ளது. ஓய்வூதியத்தை விதிகளுக்கு புறம்பாக பெற்ற அரசு பணியாளர்கள் மீது அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட துறை மூலமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் பெற்ற தொகையுடன் வட்டி விதித்து வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
The post கேரளாவில் 1,458 அரசு ஊழியர்கள் முறைகேடாக சமூக நல ஓய்வூதியம் பெற்றது ஆதாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது!! appeared first on Dinakaran.