சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை என தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை

தஞ்சாவூர், நவ. 29: கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் தவறான தகவல்கள் வரப்போர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கி கடந்த நேற்று வங்கக்கடலில் பெங்கால் புயல் உருவாகி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் சில இடங்களில் தண்ணீர் அதிகமாக வீடுகளில் சூழ்ந்துள்ளது போன்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போன்றும் சிலர் தவறான பிம்பத்தினை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தவறான தகவல்களை சமுக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது போன்ற அதிகாரபூர்வமற்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மழை வெள்ளம் குறித்த சந்தேகங்கள் மற்றும் அவரச உதவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் வெள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04362 230121 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வெள்ளக் கட்டுப்பாட்டு கட்டணமில்லா சேவை எண் 1077 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post சமூக வலைதளங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை என தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: