- ஜெயங்கொண்டம்
- சிவன் கோயில்கள்
- ஜெயங்கொண்டம்
- காகல்மலைநாதர்
- சென்னீஸ்வரர்
- சோஹீஸ்வரர்
- கங்கைகொண்டா
- சோழபுரம்
- பிரகதீஸ்வரர்
- உதயர்பாளையம்
- பைரனீஸ்வரர்
- பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்
- செங்குந்தாபுரம்…
ஜெயங்கொண்டம், நவ.29: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாடுகளில் பொதுமக்கள் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீஸ்வரர் சிவன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் சிறப்பாக பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர்,
மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர், இராதாபுரம் வராஹேஸ்வரர் உள்ளிட்ட சிவன்கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
The post ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு: நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.