×
Saravana Stores

விளையாட்டு விடுதி பயிற்சி மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட்: அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர், நவ. 29: 2024-2025ம் ஆண்டிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் 2024ஆம் ஆண்டிற்கு ஹாக்கி விளையாட்டில் 27 மாணவர்களும், கைப்பந்து விளையாட்டில் 18 மாணவர்களும், தடகளம் விளையாட்டில் 8 மாணவர்களும் மொத்தம் 53 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் 53 மாணவர்களுக்கு அரசு சார்பில் பை (Bag), தெர்மோ தண்ணீர் பாட்டில் (Thermo Water Bottle), தொப்பி (cap), கைத்துண்டுகள் (Hand Towels), மைக்ரோ பைபர் துண்டுகள் (Micro Fibre towel), கடிகாரம் (Watch) உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்ட சாம்பியன்ஸ் கிட் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, மாணவர்களுக்கு வழங்கினார் .
இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு விடுதி பயிற்சி மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட்: அரியலூர் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Tamil Nadu government ,Tamil Nadu Sports Development Authority ,District… ,
× RELATED திண்டுக்கல்லில் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட்