நாகப்பட்டினம்,நவ.29: நாகப்பட்டினத்தில் கனமழையால் தேங்கிய மழை நீரை வடியவைக்கும் பணிகளை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு, பகலாக கன மழை பெய்தது. இதனால் நாகப்பட்டினம் நகர பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து நாகப்பட்டினம் நகர பகுதியில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நாகப்பட்டினம் நகர பகுதியில் தேங்கிய மழை நீரை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் வடிவைக்கப்பட்டது. இரவு, பகலாக மழை நீரை வடியவைக்கும் பணி நடந்த வருகிறது.
The post நாகப்பட்டினத்தில் கனமழை; தேங்கிய மழை நீர் வடியவைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.