நாகப்பட்டினம்,நவ.29: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று மழை லேசாக ஓய்ந்ததால் கடந்த 2 தினங்களுக்கு பின்னர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விடாமல் கன மழை பெய்தது. இதில் ஆடு, குதிரை என 30 கால்நடைகள் இறந்தது. குடிசை வீடு பகுதியாக 83 சேதம் ஏற்பட்டுள்ளது. முழுவதுமாக 2 குடிசை வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
8 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (28ம் தேதி) காலை முதல் மழை லேசாக ஓய்வு அடைந்துள்ளது. இதனால் கடந்த 2 தினங்களாக வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்கள் நேற்று முதல் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை ஓய்ந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் appeared first on Dinakaran.