×
Saravana Stores

கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்வு: கிலோ ரூ350க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ350க்கு என இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு திருநெல்வேலி, விழுப்புரம், தேனி, கம்பம், திருச்செந்தூர், பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் முருங்கைக்காய் வருவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாட்டில் முருங்கைக்காய் சீசன் முடிந்ததால், வரத்தும் குறைந்தது. தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று காலை முருங்கைக்காய் ரூ100லிருந்து ரூ350க்கு விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ400க்கு விற்பனை செய்யப்படுவதால், காய்கறி வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவால் எலுமிச்சை பழத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ150லிருந்து ரூ50க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறுகையில், தமிழ்நாட்டில் முருங்கைக்காயின் சீசன் முடிந்து உள்ள நிலையில் தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வருவதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் வந்தவுடன் முருங்கைக்காய் விலை படிப்படியாக குறையும் என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்வு: கிலோ ரூ350க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,CHENNAI ,Koyambedu ,Tirunelveli ,Villupuram ,Theni ,Kampam ,Tiruchendur ,Panruti ,Vrudhachalam ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு