×
Saravana Stores

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரண நிதி: – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்துவந்த விமலா (28) புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த 4 சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும்,

வேதனையும் அடைந்தேன். விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

The post சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரண நிதி: – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Mu. K. ,Stalin ,Vimla ,Pudukkottai District ,Mandaiur Police Station ,Kulathur ,Pudukkotta-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED கனமழையின் போது பொதுமக்களை...