×
Saravana Stores

செம்பருத்தி பூ சட்னி

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ – 15-20
தேங்காய் – ½ மூடி
எலுமிச்சை பழம் – ½ மூடி
பூண்டு – 5 பல்
வரமிளகாய் – 5
இஞ்சி – 1 இன்ச் துண்டு
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ டீ ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – ½ டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

செம்பருத்தி பூவின் அடிப்பகுதியில் இருக்கும் காம்பை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெதுவெதுப்பாக சூடு செய்வும்.பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து செம்பருத்தி இதழ்களை நன்றாக கழுவவும்.இது பூவில் இருக்கும் சிறு பூச்சிகள் அல்லது எறும்புகளை நீக்கும்.மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரால் அலசவும்.பின் செம்பருத்தி இதழ்களை தண்ணீர் இல்லாமல் உலர வைக்கவும்.பூண்டின் தோலை நீக்கி வைத்து கொள்ளவும்.தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைக்கவும்.எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைக்கவும்.இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த செம்பருத்தி பூ இதழ்கள், பூண்டு, இஞ்சி, மற்றும் காம்பு நீக்கிய வரமிளகாயை சேர்க்கவும்.பின் அதனுடன் கருவேப்பிலை, துருவிய தேங்காய், மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இப்போது வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் அதில் பச்சை கருவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்டினி உடன் சேர்த்தால் சுவையான செம்பருத்தி பூ சட்னி ரெடி!

 

The post செம்பருத்தி பூ சட்னி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மழைக்கால சருமப் பராமரிப்பு!