சென்னை: வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சிலமணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.
6 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.
நவ.30-ல் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30-ல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.30-ல் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
நவ.30-ல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் நவ.30-ல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நவ.30-ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நவ.30-ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் கனமழை பெய்யும்.
The post வங்க கடலில் நகரத்தொடங்கிய ஃபெங்கல் புயல்.. அதி கனமழை எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? appeared first on Dinakaran.