சென்னை: மழையில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கி அவர்களின் துயரை துடைக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.
The post சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.