- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய வானிலையியல் துறை
- சென்னை
- வங்காள தென்மேற்கு விரிகுடா
- காரைக்கால்
- புதுச்சேரி
சென்னை: தமிழ்நாட்டுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது நாளை மறுநாள் நவ.30ம் தேதி காலை காரைக்கால் – புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. குறிப்பாக காரைக்கால் – மாமல்லபுரம் இடையே காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். அந்த நேரத்தில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் நாளை மறுநாள் (நவ.30) தமிழ்நாட்டிற்கு அதிகனமழைக்கான சிகப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது. குறிப்பாக இன்று முதலே அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு 21 செ.மீ.க்கு அதிகமாக இருக்கும் என்பதால் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் (நவ.30) ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.