×
Saravana Stores

புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

வேதாரண்யம், நவ.28: வேதாரண்யத்தில் ஒரு கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே ரூ.ஒரு கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வேதாரண்யத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் புகழேந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட சார் பதிவாளர் மணிகண்டன், வேதாரண்யம் சார் பதிவாளர் யாசர் அராபத், ஆத்மாகுழு உறுப்பினர்கள் உதயம் முருகையன் , சதாசிவம், ஒப்பந்தக்கார சிவகுமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : New Sir Registrar's Office ,VEDARANYAM ,VEDARANYA ,Nagapattinam District ,Vedaranyam Bus Station ,New Registrar's Office ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை