சீர்காழி, நவ. 28: சீர்காழி அருகே சூரக்காடு நான்கு வழி சாலை மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கொட்டுவதால் பாலம் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அமைந்துள்ள நான்கு வழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி சுவற்றின் வழியாக மழை நீர் கொட்டி வருகிறது. இதனால் பாலம் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட பைப்புகள் வழியாக தண்ணீர் வராமல் சுவற்றின் வழியாக மழை நீர் கொட்டி வருகிறது. இதனால் சுவற்றின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு மேம்பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் போக்குவரத்தும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீர்காழி அருகே நான்கு வழி சாலை மேம்பால சுவற்றில் மழைநீர் வடிவதால் சேதமடையும் அபாயம் appeared first on Dinakaran.