நாகப்பட்டினம், நவ.28: நாகப்பட்டினம் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றத்தில் அரசியலமைப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மக்களாட்சி தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்திய திருநாட்டின் வளமான பாதையை முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னதமான உருவாக்கம் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 75வது அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட அரசு வழக்கறிஞர் செல்வராஜ், வக்கீல்கள் சதீஸ்பிரபு, அழகுராஜா, வெங்கடேஷ்வரன், பரிபாலன், வேதை ராமசந்திரன், பாஸ்கர், சிவகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாட்டின் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.