- கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றியம்
- உதயநிதி ஸ்டாலின்
- கிருஷ்ணராயபுரம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக
- உதயநிதிஸ்தல்
- தின மலர்
கிருஷ்ணராயபுரம், நவ.28: கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழக இரு வண்ணக் கொடியேற்றிவைத்து இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ரவி ராஜா தலைமையில் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைப்படியும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூர் கடைவீதியில், கட்டளை, முனையனூர் பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கழக இரு வண்ண கொடியேற்றி வைத்து இனிப்புகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் வாட்டர் பாட்டில்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நல்லிச்சாமி, கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன். சுமித்ராதேவி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், அம்பிகாபதி, கேஎஸ்.பரமசிவம், ரவிசாமி, தொண்டரணி சாக்ரடீஸ், ராஜா, ஒன்றிய துணை செயலாளர் இளவரசன், கல்பனா, ஒன்றிய நிர்வாகிகள். இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தன்ராஜ், மாணவரணி பாண்டியராஜ், மகளிரணி ஜெயா, தொண்டரணி சிவானந்தம், கிளைச்செயலாளர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.