- ராஜேஷ் குமார்
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல் அமைச்சர்
- ஓமான்
- Karungal
- தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- மிடாலம்
- கில்லியூர்
- வண்யக்குடி
- மண்டைக்காடு புதூர்
- பல்லம்
- ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.
- தின மலர்
கருங்கல், நவ.28 : தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட மிடாலம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆன்றோ, வாணியக்குடி, மண்டைக்காடு புதூர், பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய விஜயகுமார், மரிய நாயகம், டார்வின், ஜெபின் ஆகிய 5 மீனவர்களை மிடாலம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஓமன் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக விசா கொடுத்து அழைத்து சென்றுள்ளார். தற்போது சந்திரன் மீனவர்களுக்கு எந்த உணவு பொருட்களும், சம்பளமும் வழங்காமல் ஊருக்கு வந்துள்ளார். இதனால் 5 மீனவர்களும் சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் ஓமன் நாட்டில் உள்ள துறைமுகத்தில் விசைபடகிலேயே தங்கி உள்ளனர். ஆகவே அரசு சார்பில் 5 மீனவர்களுக்கும் தேவையான உணவு பொருள், மருத்துவ உதவி செய்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post ஓமன் நாட்டில் தவிக்கும் 5 குமரி மீனவர்களையும் மீட்க வேண்டும் முதல்வருக்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ கடிதம் appeared first on Dinakaran.