- நாசரேத் செயின்ட் லூக்கா நர்சிங் கல்லூரி
- நாசரேத்
- மாணவர் செவிலியர் சங்கம்
- தென்னிந்திய திருச்சபை
- தூத்துக்குடி
- நாசரேத் செயின்ட் லூக் நர்சிங் கல்லூரி
- தின மலர்
நாசரேத், நவ.28: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாளில் நடந்த துவக்க விழாவுக்கு கல்லூரித் தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் சோபியா ஞானமேரி வரவேற்றார். திருமறையூர் மறுரூப ஆலய சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார். முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன் கொடியசைத்து போட்டியை துவக்கிவைத்தார். போட்டிகளை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித், தனபால், செவிலியர் சங்க துறைத்தலைவர்கள் ரூபன் காலிசன், ப்ரூலின் மெல்சியா முன்னின்று நடத்தி வருகின்றனர். மாணவி கனிஷ்டா பூவரசி நன்றி கூறினார்.
The post நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.