மதுரை, நவ. 28: மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் தஸ்தாஹீர். இவரது மனைவி ஹஜிரா பானு(50). இவருக்கு அஹிம்சாபுரம் விலாசம் தெருவை சேர்ந்த ஜாகீர்உசேனின் அறிமுகம் கிடைத்தது. துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வருவதாக ஜாகீர்உசேன் கூறியுள்ளார். இதனால் தனக்கும் வெளிநாட்டில் வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, அவரிடம் ஹஜிரா பானு தெரிவித்துள்ளார். பின்னர் தனது பாஸ்போர்ட்டையும் அவரிடம் கொடுத்துள்ளார். இதற்காக ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்தை ஜாகீர் உசேன் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பாத அவர், ரூ.1.10 லட்சத்தைம மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதி பணத்தை மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை கோரி தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசில் ஹஜிராபானு புகார் செய்தார். போலீசார் ஜாகீர்உசேன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி appeared first on Dinakaran.